மன்னிப்பு கேட்டார் ஸ்டைன் | மார்ச் 03, 2021

தினமலர்  தினமலர்
மன்னிப்பு கேட்டார் ஸ்டைன் | மார்ச் 03, 2021

கராச்சி: ஐ.பி.எல்., தொடர் குறித்து தவறாக தெரிவித்த கருத்துக்கு ஸ்டைன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் 37. ஐ.பி.எல்., தொடரின்முதல் சீசனில்(2008)ரூ. 1.3 கோடிக்கு வாங்கப்பட்டார். பின் ஐதராபாத் அணி ரூ. 9.5 கோடி கொடுத்து வாங்கியது.2020ல் ரூ. 2 கோடிக்கு வாங்கிய பெங்களூரு அணிக்காக, 3 போட்டியில் 1 விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.

சமீபத்தில் ஐ.பி.எல்., தொடரில் இருந்த விலகி பாகிஸ்தான் பிரிமியர் லீக்கில் (பி.பி.எல்.,) குவெட்டா அணிக்காக விளையாடுகிறார்.இவர் கூறுகையில்,‘ஐ.பி.எல்., தொடரில் பணம் கொட்டும், கிரிக்கெட் மறந்து விடும்,’ என்றார். தனது கருத்துக்கு ஸ்டைன் 37, மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் கூறுகையில்,‘‘ ஐ.பி.எல்., எனது வாழ்க்கையில் பல்வேறு ஆச்சரியங்களை குறைவில்லாமல் தந்தது. மற்றொரு லீக்குடன், ஐ.பி.எல்., தொடரை ஒப்பிட்டு அவமதிப்பது எனது நோக்கமல்ல. சமூக வலைதளங்கள் மாற்றி சொல்லிவிட்டன. எனது கருத்து யாரையாவது ‘அப்செட்’ செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,’’ என்றார்.

மூலக்கதை