‘அமேசான்’ செயலி வடிவம் எதிர்ப்புக்கு பிறகு மாற்றம்

தினமலர்  தினமலர்
‘அமேசான்’ செயலி வடிவம் எதிர்ப்புக்கு பிறகு மாற்றம்

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘அமேசான்’ கிட்டத்தட்ட, ஐந்து ஆண்டுகளுக்கு பின், அதனுடைய மொபைல் செயலிக்கான சின்னத்தை மாற்றியது, பெரும் எதிர்ப்பை சந்திக்க வழிசெய்துவிட்டது.

‘அமேசான்’ நிறுவனம், அதன் செயலிக்கான சின்னத்தை, அண்மையில் மாற்றி அமைத்து, முதலில் ஐபோன்களுக்காகவும், பின்னர் ஆண்ட்ராய்டு போன்களுக்காகவும் வெளியிட்டது. இச்சின்னத்தின் அமைப்பு, சிறிய மீசையுடன் கூடிய ஹிட்லரை நினைவு கூர்வது போல இருப்பதாக, சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, ‘அமேசான்’ நிறுவனம், அதன் செயலிக்கான சின்னத்தை, சப்தம் காட்டாமல், மாற்றி அமைத்து வெளியிட்டுள்ளது.‘அமேசான்’, முதலில் மாற்றியமைத்த சின்னத்தில், அதன் அம்பு படத்துக்கு மேல், ஒரு நீலப் பட்டை இடம்பெற்று இருந்தது.

இதில், அம்பு படம், சிரிக்கும் வாய் போலவும், அதன் மேல் இருக்கும் நீலப் பட்டை, ஹிட்லரின், ‘டூத்பிரஷ்’ போன்ற மீசையை நினைவுபடுத்தும் வகையிலும் இருப்பதாக விமர்சனம் எழுந்தது.இதையடுத்து, சிறிய மாற்றத்தை செய்து, புதிய சின்னத்தை வெளியிட்டுஉள்ளது அமேசான்.

மூலக்கதை