‘அதானி என்டர்பிரைசஸ்’ மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது

தினமலர்  தினமலர்
‘அதானி என்டர்பிரைசஸ்’ மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது

மும்பை:‘அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனம், ஒரு லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்து உள்ளது.

நேற்றைய பங்கு வர்த்தகத்தில், இந்நிறுவன பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, இதன் சந்தை மதிப்பும் புதிய உயரத்தை தொட்டது.39வது இடம்நேற்று பங்கு வர்த்தகத்தின் முடிவில், இந்நிறுவனத்தின் பங்கு விலை, மும்பை பங்குச் சந்தையில், 918.65 ரூபாயாகவும்; தேசிய பங்குச் சந்தையில், 916 ரூபாயாகவும் உயர்ந்தது.

இதனையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில், 39வது இடத்துக்கு, ‘அதானி என்டர்பிரைசஸ்’ முன்னேறி உள்ளது.

மூன்றாம் நிறுவனம்

அதானி குழுமத்தில், மூன்றாவதாக, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நிறுவனமாகும், ‘அதானி என் டர்பிரைசஸ்’. ஏற்கனவே, ‘அதானி கிரீன் எனர்ஜி’, 1.83 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடனும்; ‘அதானி போர்ட் அண்டு எஸ்.இ.இசட்.,’ நிறுவனம், 1.52 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடனும் உள்ளன.

மூலக்கதை