ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

தினமலர்  தினமலர்
ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜு வர்க்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜூ வர்க்கீஸ், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்புக்கான ஏற்பாடுகளை கவனித்த துவக்க குழுவின் நான்கு உறுப்பினர்களில் ஒருவராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில் மஜூ வர்க்கீஸ், அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் பல பொறுப்புகளில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை