14 நாட்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள இளவரசர் பிலிப்

தினமலர்  தினமலர்
14 நாட்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள இளவரசர் பிலிப்

எடின்பர்க்கின் இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக முன்னதாக கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.தற்போது அவர் செயின்ட் பார்தோலோமோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான 99 வயதான இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என சோதனை மேற்கொள்ளப்பட்டது.தற்போது அவருக்கு இருதய பரிசோதனை மேற்கொள்ள செயின்ட் பார்தோலோமோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இருதய சிகிச்சைக்கு பேர்போன இந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

14 நாட்கள் அவருக்கு இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அவரது உடல் ஒத்துழைப்பு அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிலிப் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அரச குடும்ப ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை