தேர்தல் பணப் பட்டுவாடா கட்டுப்பாட்டு அறை திறப்பு

தினமலர்  தினமலர்
தேர்தல் பணப் பட்டுவாடா கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை : தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்க, வருமான வரித் துறை அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை : சென்னை வருமான வரித் துறை, கூடுதல் இயக்குனர் சிவசங்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும், ஏப்., 6ம் தேதி நடைபெறுகிறது.இந்தத் தேர்தலில், தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்கவும், தேர்தலின் போது, அப்பணத்தை பயன்படுத்துவதை தடுக்கவும், வருமான வரித் துறையிடம், தேர்தல் ஆணையம் உதவி கோரியது.

அதன்படி, கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்கவும், அப்பணத்தை பயன்படுத்துவதை தடுக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை மண்டலத்தின், புலனாய்வு பிரிவு இயக்குனரகம், இலவச தொலைபேசி எண்களுடன், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

இ - மெயில்மக்களுக்கு பட்டுவாடா செய்ய, பணம், பொருட்கள் எடுத்து சென்றாலோ அல்லது பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தாலோ, உடனடியாக புகார் அளிக்கலாம்.தகவல் தெரிவிக்க விரும்புவோர், இலவச தொலைபேசி எண், 1800 425 6669; 'பேக்ஸ்' எண், 044- 2827 1915; இ - மெயில் முகவரி, [email protected]; 'வாட்ஸ் ஆப்' மொபைல் எண், 94453 94453 வாயிலாக தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை