பெண்ணின் புகாரை விசாரிக்க சென்ற கான்ஸ்டபிளை தாக்கியவர் கைது

தினகரன்  தினகரன்
பெண்ணின் புகாரை விசாரிக்க சென்ற கான்ஸ்டபிளை தாக்கியவர் கைது

புதுடெல்லி: பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட புகாரில் விசாரிக்க சென்றபோது கான்ஸ்டபிளை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தெற்கு டெல்லியின் சங்கம் விகார் பகுதியை சேர்ந்தவர் ஷிவம். இவர் இளம் பெண் ஒருவரை மிரட்டி தன்னை அடிக்கடி வந்து சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், வர மறுத்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதோடு, சில்மிஷத்தில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்றார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், போலிசில் புகார் அளித்தார். இதையடுத்து, கேஎம் புர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் கோமல், சந்தீப் யாதவ் மற்றும் கான்ஸ்டபிள் நேரு மூவரும் ஐஎன்ஏ சர்க்கில் பகுதிக்கு சென்றனர். அங்கு தான் பாதிக்கப்பட்ட பெண்ணை வருமாறு ஷிவம் மிரட்டல் விடுத்தார். அதன்படி, அங்கு வந்த ஷிவம், போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள கால்வாயில் குதித்தார். கான்ஸ்டபிள் நேருவும் பின்தொடர்ந்து சென்று ஷிவத்தை மடக்கிப்பிடித்தார். அப்போது ஆத்திரமடைந்த ஷிவம் அருகில் கிநட்த செங்கல்லை எடுத்து நேருவின் நெற்றியில் தாக்கி காயப்படுத்தினார். பின்னர் சக போலீசார் உதவியுடன் ஷிவம் மடக்கி கைது செய்யப்பட்டார். ஷிவம் மற்றும் கான்ஸ்டபிள் நேரு இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஷிவத்தை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படடார். போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக துணை கமிஷனர் அதுல் குமார் தாகூர் தெரிவித்தார்.

மூலக்கதை