ராகவ் சதா முன்னிலையில் முன்னாள் மிஸ் இந்தியா ஆம் ஆத்மியில் இணைந்தார்

தினகரன்  தினகரன்
ராகவ் சதா முன்னிலையில் முன்னாள் மிஸ் இந்தியா ஆம் ஆத்மியில் இணைந்தார்

புதுடெல்லி:  முன்னாள் மிஸ் இந்தியா மான்சி செகல், ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அழகி போட்டியில் பங்குபெற்று கடந்த 2019ம் ஆண்டு இந்திய அழகியாக(மிஸ் இந்தியா) தேர்வான மமான்சி செகல் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.  கட்சியின் எம்எல்ஏ ராகவ் சதா ஏற்பாட்டில் நரைனா கிளப்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்று கட்சியில் இணைந்த பின்னர் அதற்கான காரணங்கள் குறித்து மான்சி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான நிர்வாகம் செய்யும் தன்னைம என்னை வெகுவாக கவர்ந்தது. அதன் காரணமாகவே நான் ஆம் ஆத்மியில் இணைய முடிவு செய்தேன். எந்தவொரு நாட்டுக்கும் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டும் இரு தூண்களாகும். முதல்வர் கெஜ்ரிவால் தலைமையின் கீழ் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக இந்த இரண்டு துறைகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் நேர்மையான நி்ர்வாகம், ராகவ் சதா எம்எல்ஏவின் கடும் உழைப்பு உள்ளிட்டவை என்னை கட்சியில் சேர ஈர்த்தது. தூய்மையான அரசியலின் மூலம், நாம் வாழும் உலகில் கணிசமான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.  நான் இளைஞர்களையும் குறிப்பாக என்போன்ற பெண்களையும் ஆம் ஆத்மி கட்சியில் எங்களுடன் சேருமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் பார்க்க விரும்பும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில், ராகவ் சதா பேசுகையில், ‘‘ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இளைஞர்கள் அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற  நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர். அவற்றால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  மேலும் ஒவ்வொரு நாளும் ஆம் ஆத்மி குடும்பம் வேகமாக முன்னேறி வருகிறது. ஆம் ஆத்மி குடும்பத்தில் இணைந்துள்ள மான்சி நான் மனதார  வரவேற்கிறேன்” என்றார்.

மூலக்கதை