தற்போது வரை போராட்டக்களத்தில் விவசாயிகள் யாருக்கும் தொற்று பாதிக்கவில்லை: தடுப்பூசிகள் தேவையில்லை எனவும் விவசாயிகள் கருத்துதற்போது வரை போராட்டக்களத்தில் விவசாயிகள் யாருக்கும் தொற்று பாதிக்கவில்லை: தடுப்பூசிகள் தேவையில்லை எனவும் விவசாயிகள் கருத்து

தினகரன்  தினகரன்
தற்போது வரை போராட்டக்களத்தில் விவசாயிகள் யாருக்கும் தொற்று பாதிக்கவில்லை: தடுப்பூசிகள் தேவையில்லை எனவும் விவசாயிகள் கருத்துதற்போது வரை போராட்டக்களத்தில் விவசாயிகள் யாருக்கும் தொற்று பாதிக்கவில்லை: தடுப்பூசிகள் தேவையில்லை எனவும் விவசாயிகள் கருத்து

புதுடெல்லி: நாடு முழுவதும் கோவிட்-19 இரண்டாம்கட்ட தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 45-49 வயதடைய இணை நோய் பாதித்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகள் இந்த தடுப்பூசிகளை போடப்போவதில்லை என்றும், அதே சமயத்தில் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டோம் என்றும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி கோராட்டக்களத்தில் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சம்யுக்தா கிசான்  மோர்ச்சாவின் மூத்த உறுப்பினர் 80 வயதான பல்பீர் சிங்  ராஜேவால் கூறுகையில், தடுப்பூசியை போடுவதற்காக நான் அதற்கான மையங்களுக்கு செல்லமாட்டேன். எனக்கு  தடுப்பூசி தேவையில்லை. நாங்கள் கொரோனாவைக் கொல்லும் திறன் படைத்தவர்கள். விவசாயிகளின்  நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தங்கள் வயல்களில்  கடினமாக உழைக்கிறார்கள். விவசாயிகள் கொரோனா வைரஸுக்கு பயப்படுவதில்லை”  என்றார்.மற்றொரு மூத்த தலைவர் ஜோகிந்தர் சிங்  உக்ரஹான் (75) கூறுகையில், இந்த நோய் தொற்று எங்களை தாக்கும் என்று அச்சப்படுவதற்கு அரசின் இந்த திசை திருப்பல்கள் போதுமானவையல்ல என்று கிண்டலடித்தார். ஆனால் நாங்கள்  யாரையும் தடுப்பூசியை போட வேண்டாம் என்று கூற மாட்டோம். அவரவர் விருப்பம் சார்ந்தது” என்று டெல்லியின் திக்ரி  எல்லையில் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பாரதிய கிசான் யூனியனின் (ஏக்தா  உக்ரஹான்) தலைவர் கூறினார்.இருப்பினும், காசிப்பூர் எல்லையில்  போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ்  டிக்காய்டின் ஊடக பொறுப்பாளர் தர்மேந்திர மாலிக் தெரிவிக்கையில், உள்ளூர் நிர்வாகம் தடுப்பூசி போடுவதற்காக விவசாயிகளுக்கு தேவையான ஏற்பாடு செய்தால் அதை போட்டுக்கொள்வதில் திகைத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை” என்றார்.சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் உறுப்பினர் 70  வயதான குல்வந்த் சிங் சந்தூ கூறுகையில்,‘‘நாங்கள் கொரோனா வைரஸுக்கு  பயப்படவில்லை. டெல்லி எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளிருப்பு  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு கொரோனா வைரஸ் கூட அங்கு  கண்டறியப்படவில்லை” என்றார்.

மூலக்கதை