கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி

தினகரன்  தினகரன்
கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி

சாம்ராஜ்நகர்: வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மூங்கில் பொருட்கள் கொண்டு வீட்டு உபயோக பொருட்கள் செய்யும் சுய வேலை வாய்ப்பு பயிற்சியை மாவட்ட வனத்துறை அதிகாரி ஏலுகொண்டலு ெதாடங்கி வைத்தார். சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹெனூர் தாலுகா மலைமாதேஸ்வரா வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மூங்கில் பொருட்களை கொண்டு வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பதற்கும், அதை சந்தைப்படுத்துதல் குறித்த சுய வேலை வாய்ப்பு பயிற்சியை இன்டஸ்டிரி பவுண்டேஷன் என்ற தனியார் அமைப்புடன் சேர்ந்து வனத்துறை நடத்தியது.இதை தொடங்கி வைத்து மாவட்ட வனத்துறை அதிகாரி ஏலுகொண்டலு கூறுகையில், வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு ேவலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியாக இன்டஸ்டிரி பவுண்டேஷன் என்ற தனியார் அமைப்புடன் சேர்ந்து வனத்துறை சுயவேலைவாய்ப்பு பயிற்சியளிக்கிறது.  இந்த திட்டத்திற்காக 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக 80 லட்சம் விடுவிக்கப்பட்டு இப்பயிற்சி ெதாடங்கப்பட்டுள்ளது. இந்த சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் முதல்கட்டமாக 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் 1000 பேருக்கு இந்த சுயவேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு வனத்துறை அதிகாரி ஏலுகொண்டலு தெரிவித்தார்.

மூலக்கதை