மேற்கு வங்கத்தில் மம்தா-தேஜஸ்வி திடீர் சந்திப்பு

தினகரன்  தினகரன்
மேற்கு வங்கத்தில் மம்தாதேஜஸ்வி திடீர் சந்திப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை, 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில்  திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் மம்தாவே  மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளன.இந்நிலையில், பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தலைமையகத்தில் முதல்வர் மம்தாவை  நேற்று சந்தித்தார். பீகாரில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ள ஆர்ஜேடி. மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி பேச்சு நடத்த  வந்திருப்பதாக ஊகங்களில் செய்தி வெளியாகின. ஆனால், முதல்வரை சந்தித்த பின் அவர் அளித்த பேட்டியில், மேற்கு வங்கத்தில் பாஜ. வளர்ச்சியை  நிறுத்துவதே ஆர்ஜேடி.யின் முக்கிய நோக்கமாகும். ஆர்ஜேடி, திரிணாமுல் காங்கிரசுக்கு முழு ஆதரவு வழங்க உள்ளது. எனவே, இங்கு வசிக்கும் பீகார்  மாநில மக்கள் மம்தாவுக்கு ஆதரவு அளியுங்கள்,’’ என்று கூறினார்.

மூலக்கதை