6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இரண்டாம் அலை காரணமாக சிகிச்சையில் இருப்பவர்களின்  எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று  வருகிறவர்களின் எண்ணிக்கை 1,68,627 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 15,510 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 106 பேர் இறந்துள்ளனர்.  மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருக்கிறது.  இந்தியாவின் மொத்த தொற்று பரவலில் 87.25 சதவிகிதம் பேர் இந்த 6 மாநிலங்களில் உள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில்  தொற்றுவிகிதம் மிகவும் அதிகமாக உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை