திருநங்கைகளுக்கு நல்வாழ்வு வாரியம் : உச்ச நீதிமன்றத்தில் மனு

தினகரன்  தினகரன்
திருநங்கைகளுக்கு நல்வாழ்வு வாரியம் : உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச  நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த ரிட் மனுவில்,‘‘நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளின் பிரச்னையை தீர்க்கும் விதமாக அவர்களுக்கு என  நல்வாழ்வு வாரியத்தை அனைத்து மாநிலத்திலும் அமைக்க வேண்டும். அதேப்போன்று அவர்கள் மீது சுமத்தப்படும் துஷ்பிரயோகம், அவதூறு வழக்கு ஆகியவை தொடர்பான விவகாரத்தை உடனடியாக விசாரித்து முடிக்கும்  விதமாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும், தலைமைக் காவலர், மனித உரிமை ஆணைய உறுப்பினர், ஒரு சமூக ஆர்வலர் ஆகியோர் அடங்கிய  சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, தமிழகம், மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் திருநங்கைகள்  நல்வாழ்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை