தடுப்பூசி போடுவதில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

தினகரன்  தினகரன்
தடுப்பூசி போடுவதில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

புதுடெல்லி:  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘எனக்கு 70 வயதுக்கு மேலாகிறது. எனக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிலாக இளைஞர்களுக்கு  அதிகமான முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். நான் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள்தான் உயிருடன் இருப்பேன். ஆனால், இளைஞர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும். நானும்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன். ஆனால், முன்னுரிமையை இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மூலக்கதை