தங்கவயலில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தினகரன்  தினகரன்
தங்கவயலில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தங்கவயல்: திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா தங்கவயல் திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.  திமுக தலைவர் ஸ்டாலினின் 68வது  பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தங்கவயல் திமுகவினர் ராபர்ட்சன் பேட்டை காந்தி சதுக்கத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் நகர பொறுப்பாளர் த.கருணாநிதி தலைமை தாங்கி பேசும் போது,”உழைப்பு எனும் சக்தியின் உன்னதத்தை உணர்ந்து, தனது உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து, தேர்தல் களத்திலே தீவிரமாகப் பாடுபட்டு வரும் தலைவர் ஸ்டாலின் கழகத்தின் வெற்றியை உறுதியாக்கி வருகிறார். தமிழ் மக்களுக்கு நல்வாழ்வு தருவதற்காக  இனம், மொழி காத்து, தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்வதற்காக ஓயாமல் உழைத்து கொண்டிருக்கும் கழக தலைவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதில் தங்கவயல் திமுக பெருமை கொள்கிறது” என்றார். தொடர்ந்து அங்கு சரவெடி பட்டாசு வெடித்தனர். பின்னர் வழக்கறிஞர் பா.மணிவண்ணன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். சவுந்தரராஜ், விக்டர், சேகரன்ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை