ஊழல் வழக்கில் பிரான்ஸ் மாஜி அதிபர் சர்கோஷிக்கு 3 ஆண்டு சிறை

தினமலர்  தினமலர்
ஊழல் வழக்கில் பிரான்ஸ் மாஜி அதிபர் சர்கோஷிக்கு 3 ஆண்டு சிறை

பாரிஸ்: ஊழல் மற்றும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பிரான்ஸ் மாஜி அதிபர் நிக்கோலஸ் சர்கோஷிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.

2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக இருந்தார் நிகோலஸ் சார்க்கோசி. இவர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றதும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு கோர்ட் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது..



ஊழல் குற்றவாளியான 2வது மாஜி அதிபர்


சர்கோஷி, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் பழமைவாதிகள் மத்தியில் இன்னும் செல்வாக்கில் இருந்து வருகிறார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இன்னும் 10 நாட்கள் உள்ளன.நவீன பிரான்சில் மறைந்த ஜாக் சிராக்கிற்குப் பிறகு, ஊழல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இரண்டாவது மாஜி அதிபர் சர்கோஷி தான்.


நீதிபதி கில்பர்ட் அஜிபெர்ட்டுக்கு மொனாக்கோவில் ஒரு வேலையைப் பெறுவதற்கு சர்கோசி முன்வந்ததாக வழக்கறிஞர்கள் வற்புறுத்தினர், 2007 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக லோரியல் வாரிசு லிலியன் பெட்டன்கோர்ட்டிடமிருந்து சட்டவிரோதமான சிலவற்றை அவர் ஏற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அது குறித்த விசாரணையில் சில ரகசிய தகவலுக்கு சர்கோஷி பதிலளித்தார்.இது வெளிச்சத்திற்கு வந்தது, லிபிய நிதியுதவி தொடர்பான மற்றொரு விசாரணையில் மேலும் இத்தகவல்கள் பெறப்பட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மூலக்கதை