பக்க விளைவுகள் மிகக் குறைவு: எம்.பி., எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியினரும் கொரோனா தடுப்பூசி போட்டுகங்க: மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
பக்க விளைவுகள் மிகக் குறைவு: எம்.பி., எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியினரும் கொரோனா தடுப்பூசி போட்டுகங்க: மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன்படி, இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். பிரதமர் மோடியை தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரும் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், எங்கள் தடுப்பூசிகள் இரண்டும் பாதுகாப்பானவை மற்றும் நோயெதிர்ப்புத் திறனைப் பொருத்தவரை சரியானவை என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் பிரதமருக்கு நன்றி கூறுகிறோம், நீங்கள் எப்போதுமே முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும் என்று அவர் எங்களிடம் கூறினார். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியபோது, முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார். பிரதமர் மோடி COVAXIN கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அதற்கு எதிராக விஞ்ஞான ரீதியாக சரியானதாக இருந்தபோதும் நிறைய தவறான தகவல்கள் பரவின. பிரதமர் நாட்டிற்கு ஒரு தெளிவான செய்தியை அளித்துள்ளார் என்று நினைக்கிறேன். அனைத்து தவறான தகவல்களும் தயக்கங்களும் புதைக்கப்பட வேண்டும் என்றார். கொரோனா தடுப்பூசியை இன்று முன்பதிவு செய்வேன், நாளை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளேன் என்றார். 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொமொர்பிடிட்டி, அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பக்க விளைவுகள் வீக்கம் அல்லது காய்ச்சல் போன்றவை மிகக் குறைவு. இது சில நேரங்களில் சாதாரண தடுப்பூசியின் போதும் நிகழ்கிறது. தடுப்பூசி காரணமாக மருத்துவமனையில் அனுமதிப்பது 0.0004 - இது மிகக் குறைவு. தடுப்பூசி காரணமாக எந்த மரணமும் ஏற்படவில்லை.தடுப்பூசி போட்ட 4 நாட்கள் அல்லது 10 நாட்களுக்குப் பிறகு ஒருவர் இறந்துவிட்டால், அதை தடுப்பூசியுடன் இணைக்க முடியாது. ஒவ்வொரு மரணமும் அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டுள்ளது. உயர் ஆற்றல்மிக்க நிபுணர் குழு அதை மதிப்பீடு செய்கிறது, மரணம் தடுப்பூசி தூண்டப்பட்டதாக இதுவரை எந்த வழக்கும் வரவில்லை என்றார். மாநில அரசுகளுக்கு நாங்கள் சிறிது தளர்வு அளித்துள்ளோம். அடுத்த சில நாட்களில், வாக்-இன் அமைப்பு நெறிப்படுத்தப்படும், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மூலக்கதை