இது புதிய இந்தியா * இங்கிலாந்து வீரர் பாராட்டு | பெப்ரவரி 28, 2021

தினமலர்  தினமலர்
இது புதிய இந்தியா * இங்கிலாந்து வீரர் பாராட்டு | பெப்ரவரி 28, 2021

லண்டன்: ‘‘கடந்த 1990 களில் இருந்த ஆஸ்திரேலிய அணியைப் போல கோஹ்லியின் இந்திய அணி காணப்படுகிறது,’’ என டேரன் கப் தெரிவித்தார்.

இந்திய அணி கேப்டன்  கோஹ்லி. இவரது தலைமையில் சொந்தமண்ணில் இந்திய டெஸ்ட் அணி அதிக வெற்றிகள் (22) பெற்றது. சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் 2–1 என சாதித்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் 2–1 என முன்னிலையில் உள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேரன் கப் கூறியது:

இந்திய தொடரில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்த போட்டிகளில் அடி வாங்கியுள்ளது. இதிலிருந்து இனிமேல் மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் வீரர்களின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கும்.

அதேநேரம் இந்திய அணியின் மனநிலை உற்சாகமாக உள்ளது. கடந்த 1990களில் இருந்த ஆஸ்திரேலிய அணியினரைப் போல காணப்படுகின்றனர். எப்போதும் வெற்றி, வெற்றி, வெற்றி என்ற குரல் மட்டும் தான் ஒலிக்கும். அதுபோன்ற அணியாக இப்போதுள்ள இந்தியா உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை