நைஜீரியாவில்317 மாணவியர் கடத்தல்

தினமலர்  தினமலர்
நைஜீரியாவில்317 மாணவியர் கடத்தல்

லாகோஸ்:மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கொள்ளை கும்பல்கள், மாணவியர் உட்பட பலரை கும்பலாகக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது, சிறையில் உள்ள தங்களுடைய கும்பலைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கக் கோருவது அதிகரித்து வருகிறது.கடந்த, 2014ல், போகோஹராம் என்ற பயங்கரவாத கும்பல், 276 பள்ளி மாணவியரைக் கடத்திச் சென்றது. அதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் இன்னும் மீட்கப்படவில்லை. கடந்தாண்டு டிச.,ல் 344 மாணவியர் கடத்தப்பட்டனர்; சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். கடந்த மாதத்தில், 27 மாணவியர் உட்பட, 42 பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.இந்நிலையில், ஜாம்போரா மாநிலத்தில், ஒரு உறைவிடப் பள்ளிக்குள் நுழைந்த ஆயுதம் ஏந்த கும்பல், 317 மாணவியரைக் கடத்திச் சென்றுள்ளது. ராணுவ முகாமுக்கு அருகில் இந்தப் பள்ளி உள்ளது. முன்னதாக பள்ளி வரும் வழியில் இருந்த சோதனைச் சாவடியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விபரம் தெரியவில்லை.

மூலக்கதை