6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு

புதுடெல்லி: நாட்டில் சமீப காலமாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தொற்று, தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1  லட்சத்து 59 ஆயிரத்து 590 ஆக இருந்தது. நாட்டில் புதிதாக 16,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.  இவற்றில் 85.75% பாதிப்புகள், தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பதிவாகி உள்ளன.

மூலக்கதை