மீண்டும் கிறிஸ் கெய்ல்: விண்டீஸ் அணி அறிவிப்பு | பெப்ரவரி 27, 2021

தினமலர்  தினமலர்
மீண்டும் கிறிஸ் கெய்ல்: விண்டீஸ் அணி அறிவிப்பு | பெப்ரவரி 27, 2021

ஆன்டிகுவா: இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் விண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ள இலங்கை அணி, 3 ‘டுவென்டி–20’ (மார்ச் 4, 6, 8, இடம்: ஆன்டிகுவா), 3 ஒருநாள் (மார்ச் 10, 12, 14, இடம்: நார்த் சவுண்டு) போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இத்தொடர்களில் பங்கேற்கும் 14 பேர் கொண்ட விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக போலார்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

‘டுவென்டி–20’ அணியில் ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 41, மீண்டும் இடம் பிடித்துள்ளார். இவர், 2 ஆண்டுகளுக்கு பின், ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாட உள்ளார். கடைசியாக 2019, மார்ச் 8ல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். சீனியர் வேகப்பந்துவீச்சாளர் பிடெல் எட்வர்ட்ஸ் 39, ஒன்பது ஆண்டுகளுக்கு பின், ‘டுவென்டி–20’ அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர், கடைசியாக 2012ல் இலங்கைக்கு எதிராக விளையாடி இருந்தார். ‘சுழல்’ வீரர்களான அகீல் ஹொசைன், கெவின் சின்கிளேர் முதன்முறையாக ‘டுவென்டி–20’ அணியில் இடம் பிடித்துள்ளனர்.

 

‘டுவென்டி–20’ அணி: போலார்டு (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், பேபியன் ஆலன், டுவைன் பிராவோ, பிடெல் எட்வர்ட்ஸ், ஆன்ட்ரி பிளட்சர், கிறிஸ் கெய்ல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், எவின் லீவிஸ், மெக்காய், ராவ்மன் பாவெல், சிம்மன்ஸ், கெவின் சின்கிளேர்.

 

ஒருநாள் அணி: போலார்டு (கேப்டன்), ஷாய் ஹோப், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசப், எவின் லீவிஸ், கைல் மேயர்ஸ், ஜேசன் முகமது, நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்டு, கெவின் சின்கிளேர்.

மூலக்கதை