ஷிகா பாண்டேவுக்கு இடமில்லை: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு | பெப்ரவரி 27, 2021

தினமலர்  தினமலர்
ஷிகா பாண்டேவுக்கு இடமில்லை: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு | பெப்ரவரி 27, 2021

புதுடில்லி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடர்களில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணியில் ஷிகா பாண்டே இடம் பெறவில்லை.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து ஒருநாள் (மார்ச் 7, 9, 12, 14, 17), மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ (மார்ச் 20, 21, 24) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டிகள் லக்னோவில் நடக்கின்றன. இத்தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டி அணிக்கு மிதாலி ராஜ், ‘டுவென்டி–20’ அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் ஷிகா பாண்டேவுக்கு இடம் கிடைக்கவில்லை.

விக்கெட் கீப்பர்களான ஸ்வேதா வர்மா, சுஷ்மா வர்மா தேர்வு செய்யப்பட்டுள்னர். ஒருநாள் தொடருக்கு ஷபாலி வர்மா தேர்வு செய்யப்படவில்லை. சமீபத்திய மோசமான செயல்பாடு காரணமாக விக்கெட் கீப்பர் தான்யா பாட்யா நீக்கப்பட்டார்.

 

ஒருநாள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூணம் ராத், பிரியா புனியா, யாஸ்திகா பாட்யா, ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), ஹேமலதா, தீப்தி சர்மா, சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), சுவேதா வர்மா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஜுலன் கோஸ்வாமி, மான்சி ஜோஷி, பூணம் யாதவ், பிரத்யுஷா, மோனிகா படேல்.

 

‘டுவென்டி–20’ அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல், சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), நுஜாத் பர்வீன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷி சோனி, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், பூணம் யாதவ், மான்சி ஜோஷி, மோனிகா படேல், பிரத்யுஷா, சிம்ரன் தில் பகதுார்.

மூலக்கதை