களமிறங்குகிறார் யூசுப் பதான்: இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணியில் | பெப்ரவரி 27, 2021

தினமலர்  தினமலர்
களமிறங்குகிறார் யூசுப் பதான்: இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணியில் | பெப்ரவரி 27, 2021

ராய்பூர்: ‘ரோடு சேப்டி சீரிஸ்’ தொடருக்கான இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணியில் யூசுப் பதான், வினய் குமார் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரில், ‘ரோடு சேப்டி சீரிஸ்’ கிரிக்கெட் (‘டுவென்டி–20’) தொடருக்கான 2வது சீசன் வரும் மார்ச் 5ல் துவங்குகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், விண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ‘லெஜண்ட்ஸ்’ அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வரும் மார்ச் 5ல் சந்திக்கிறது.

இத்தொடருக்கான இந்திய அணியில், சமீபத்தில் ஓய்வை அறிவித்த ‘ஆல்–ரவுண்டர்’ யூசுப் பதான், வேகப்பந்துவீச்சாளர் வினய் குமார், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நமன் ஓஜா ஆகியோர் தேர்வாகினர். இலங்கை அணியில், 1996 உலக கோப்பை நாயகன் சனத் ஜெயசூர்யா இடம் பிடித்துள்ளார். தவிர இந்த அணியில் ரசல் அர்னால்டு, உபுல் தரங்கா இடம் பெற்றுள்ளனர்.

 

இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணி: சச்சின், சேவக், யுவராஜ், முகமது கைப், பிரக்யான் ஓஜா, நோயல் டேவிட், முனாப் படேல், இர்பான் பதான், மன்பிரீத் கோனி, யூசுப் பதான், நமன் ஓஜா, பத்ரிநாத், வினய் குமார்.

மூலக்கதை