புனேயில் ரசிகர்களுக்கு ‘நோ’: ஒருநாள் போட்டி தொடருக்கு | பெப்ரவரி 27, 2021

தினமலர்  தினமலர்
புனேயில் ரசிகர்களுக்கு ‘நோ’: ஒருநாள் போட்டி தொடருக்கு | பெப்ரவரி 27, 2021

புதுடில்லி: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான போட்டிகள் வரும் மார்ச் 23, 26, 28ல் புனேயில் நடக்கின்றன. தற்போது புனே அமைந்துள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் ஒருநாள் தொடருக்கான போட்டிகளை வேறு இடத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஒருநாள் தொடரை திட்டமிட்டபடி புனேயில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, காலி மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் என, மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’ என, தெரிவித்திருந்தது.

மூலக்கதை