50 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக வலைதளங்களுக்கு அரசின் கட்டுப்பாடுகள் கட்டாயம்

தினமலர்  தினமலர்
50 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக வலைதளங்களுக்கு அரசின் கட்டுப்பாடுகள் கட்டாயம்

புதுடில்லி: சமூக வலை தளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, '50 லட்சம் பேர் பயன்படுத்தும் சமூக வலை தளங்களுக்கு அவை பொருந்தும்' என, குறிப்பிட்டுள்ளது.


'வாட்ஸ்ஆப், டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலை தளங்கள், இந்தியாவில் செயல்படுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், இந்த சமூக வலை தளங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இதன் மூலம், அவதுாறு, வன்முறையைத் துாண்டும் தகவல்களை நீக்க, அந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தர விட முடியும்.


இந்நிலையில், இது தொடர்பாக, புதிய விளக்கத்தை, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 'நாட்டில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் சமூக வலை தளங்களே, இந்தக் கட்டுப்பாட்டின் கீழ் வரும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மூலக்கதை