ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..!

தினகரன்  தினகரன்
ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..!

வாஷிங்டன்: ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்னனர். இதன் மருத்துவ பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிராக இது மிகவும் பயனுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் உள்பட தற்போது பயன்பாட்டில் இருக்கிற தடுப்பூசிகள் அனைத்தும் இரட்டை டோஸ் தடுப்பூசிகளாகவே உள்ளன. முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.கடுமையான நோயை தடுப்பதில் இந்த தடுப்பூசி 85 சதவீதத்துக்கும் மேலாக பலன் அளிக்கும் என தரவுகள் கூறுகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக 66 சதவீதம் பலன் அளிக்கும் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 3-வது கொரோனா தடுப்பூசி மருந்து இதுவாகும்.இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளது. இதுதொடர்பாக உணவு மற்றும் மருந்து நிர்வாக இயக்குனர் ஜேனட் வூட்காக் பேசுகையில், “இந்த தடுப்பூசியின் அங்கீகாரம் இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் எங்களுக்கு உதவ, கொரோனாவின் சிறந்த மருத்துவ தடுப்பு முறையான தடுப்பூசிகளின் கிடைப்பை விரிவுபடுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை