தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கு தடுப்பூசி போட திட்டம்

தினமலர்  தினமலர்
தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கு தடுப்பூசி போட திட்டம்

புதுடில்லி: தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி, ஒரு 'டோஸ்' 250 ரூபாய்க்கு போட, மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

இப்போது கொரோனா தடுப்பூசி, மூன்று கோடி முன்களப்பணியாளர்களுக்கு, இலவசமாக போடப்பட்டு வருகிறது.மார்ச் மாதம் முதல், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக போட முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கொரோனா தடுப்பூசி, அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் மட்டுமே போடப்பட்டு வருகிறது.




இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது.அவை, ஒரு முறை தடுப்பூசி போடுவதற்கான கட்டணமாக, அதிகபட்சம், 250 ரூபாய் வசூலிக்க அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 100 ரூபாய் சேவை கட்டணமும் அடங்கும். இது குறித்து, சுகாதாரத் துறைமைச்சகம் விரைவில் முடிவு செய்யும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


மூலக்கதை