நாய்களை கண்டுபிடிக்க அரை மில்லியன் டாலர்: பாப் பாடகி அறிவிப்பு

தினமலர்  தினமலர்
நாய்களை கண்டுபிடிக்க அரை மில்லியன் டாலர்: பாப் பாடகி அறிவிப்பு

ஸ்டீபனி ஜான் ஏஞ்சலினா ஜெர்மன்நோட்டா என்ற இயற்பெயர் கொண்ட 34 வயதான பிரபல அமெரிக்க பாடகி, நடிகை லேடி காகா. உலக அளவில் ஜஸ்டின் பீபர், சை, ஏகான், உள்ளிட்ட பாடகர்கள் பிரபலமடைந்துவரும் நிலையில் மடோனா, ஜெனிபர் லோபஸ் ஆகியோரை அடுத்து உலக அளவில் பிரபலம் அடைந்த பாப் பாடகி லேடி காகா. இவருக்கு இந்தியாவிலும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு.


சமீபத்தில் இவர் இவர் செல்லமாக வளர்த்த இரண்டு ஃபிரஞ்சு புல்டாக் ரக நாய்கள் கடத்தப்பட்டன. இவை தற்போது போலீஸாரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளன. நாய்களை பறிகொடுத்த காகா, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
'கோஜி, கஸ்டவ் ஆகிய எனது இரண்டு செல்ல நாய் குட்டிகளும் அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் காணாமல் போயின. இவற்றை கண்டுபிடித்து தருபவருக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு தொகை அளிக்க நான் தயாராக உள்ளேன்'
இவ்வாறு லேடி காகா தனது டிவிட்டர் பக்கத்தில் தனது நாய்கள் காணாமல் போனதை அடுத்து பதிவு ஒன்றை இட்டிருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.
நாய்களில் பிரெஞ்சு புல்டாக் அதிகமாக கடத்தப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் இவை மிகவும் அரிதான உயிரினங்கள். இதனால் இவற்றை அதிக விலை கொடுத்து வாங்க பணக்காரர்கள் முண்டியடிப்பர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலஸ் சேர்ந்த நாய் கடத்தல் கும்பல் கோஜி, கெஸ்டவ் ஆகிய இரண்டு நாய்களையும் கடத்தியிருக்கலாம் என சந்தேகப்பட்ட அமெரிக்க போலீசார் அப்பகுதியில் தேடுதலை துவங்கினார்.

அப்போது மூன்று ஃபிரஞ்சு புல்டாகுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றை கடத்திய திருடர்கள் தப்பி ஓடினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரண்டு செல்லப்பிராணிகள் கிடைத்ததில் காகா மிக்க மகிழ்ச்சி அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை