வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் : இந்திய தொழில் துறையினர்

தினமலர்  தினமலர்
வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் : இந்திய தொழில் துறையினர்

புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.4 சதவீதமாக உயர்வை கண்டுள்ளது.இது, நாட்டின் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருப்பதாக, இந்திய தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு எடுத்த நடவடிக்கையின் பலன், இப்போது, தெளிவாக தெரிய வந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக, கடந்த ஆண்டில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, பொருளாதார செயல்பாடுகள் மந்தமாயின.

இதனால், முதல் காலாண்டில், வளர்ச்சி, மைனஸ் 24.4 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. அடுத்து வந்த இரண்டாவது காலாண்டில், மைனஸ் 7.5 சதவீதமாக இருந்தது.இந்நிலையில், மூன்றாவது காலாண்டில், 0.4 சதவீதமாக, பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி இருக்கிறது.இதையடுத்து மந்தநிலையிலிருந்து, பொருளாதாரம் மீண்டுவிட்டதாகவும், அடுத்து வரும் மாதங்களிலும் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், நம்பிக்கை தெரிவித்துள்ளனர், தொழில் துறையினர்.

மூலக்கதை