வேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும : ஐ.நா.வில் இந்தியா விளக்கம்!!

தினகரன்  தினகரன்
வேளாண் சட்டம் மூலம் 2024க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும : ஐ.நா.வில் இந்தியா விளக்கம்!!

டெல்லி : வேளாண் சட்டம் தொடர்பான போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் உணர்வுகளை இந்தியா மதிக்கிறது என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஐநாவின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே கூறியதாவது:- 2024-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை இயற்றுவதன் நோக்கம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த விலையை உணர்ந்து அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதற்கு உதவும். இது குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு பயனளிக்கும். விவசாயிகளின் போராட்டங்களுக்கு இந்திய அரசு மிகுந்த மரியாதை காட்டியுள்ளதுடன், அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். இந்த முடிவை ஜம்மு-காஷ்மீர் மக்கள் உள்பட அனைவரும் வரவேற்றனர்.. இது சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்துள்ளது, பல தசாப்த கால பாகுபாடு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்கிறது, மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் (டி.டி.சி) மூலம் அங்கு அடிமட்ட ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளோம் என்று இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்

மூலக்கதை