ஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்: ஜாங் ஷான்ஷனினனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி

தினகரன்  தினகரன்
ஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்: ஜாங் ஷான்ஷனினனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி

டெல்லி: ஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னர், முதலிடத்தில் இருந்த ஜாங் ஷான்ஷனின் பாட்டில் வாட்டர் நிறுவனம் இந்த வாரம் 20 சதவீதம் இழப்பை சந்தித்ததால் அவரது சொத்து மதிப்பு குறைந்தது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இயங்குதளங்களில் முகநூலின் 5.7 பில்லியனை முதலீடு செய்து அவரை மீண்டும் ஆசியாவின் பணக்காரராக ஆக்கியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சமூகவலைதள நிறுவனமான முகநூல் கடந்த 2014-ஆம் ஆண்டு முகநூலை கைப்பற்றிய பின்னர், தனது உலகளாவிய சந்தையை விரிவுப்படுத்த 5 புள்ளி 7 பில்லியனை முதலீடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இது 2014 முதல் சமூக ஊடக நிறுவனங்களின் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். ஒரே குடையின் கீழ் டிஜிட்டல் செயலி மற்றும் வயர்லெஸ் சேவை இரு நிறுவனங்களும் இணைந்து வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் வர்த்தக முடிந்தபின் தரவரிசை அதிகாரப்பூர்வமாக புதுப்பிக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு உரிமையாளரான அம்பானியின் செல்வம் செவ்வாயன்று ப்ளூம்பெர்க் தரவரிசையில் 14 பில்லியன் டாலர் குறைந்தது, இது ஆசியாவில் உள்ள எவருக்கும் டாலர் அடிப்படையில் மிகப்பெரிய சரிவு என கூறப்படுகிறது. ப்ளூம்பெர்க் கூற்றுப்படி, அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் மா செவ்வாய்க்கிழமை வரை கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. இந்நிலையில் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி ரிலையன்ஸ் ஜியோவின் 10 சதவீத பங்குகளை முகநூல் நிறுவனம் வாங்கியதை அடுத்து, புதன்கிழமை அமெரிக்க பங்கு சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் 10 சதவீதம் லாபத்தை ஈட்டியது. இதனால் அம்பானியின் சொத்து மதிப்பு, நேற்று புதன்கிழமை  ஒரே நாளில் 4 புள்ளி 7 பில்லியன் டாலர் உயர்ந்து, 49 புள்ளி 2 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதன்மூலம் சீனாவின் அலிபாபா குரூப் தலைவரான ஜாக் மாவை விட 3 புள்ளி 2 பில்லியன் அதிக சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். செப்டம்பர் 2016 இல் தொடங்கப்பட்ட ஜியோ, மூன்று ஆண்டுகளில், சந்தாதாரர்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை