'லக்கேஜ்' இல்லையா? விமான கட்டணத்தில் சலுகை!

தினமலர்  தினமலர்
லக்கேஜ் இல்லையா? விமான கட்டணத்தில் சலுகை!

புதுடில்லி: 'செக் இன் லக்கேஜ்' எனப்படும், கூடுதல் பயணப் பைகள் எடுத்து வராத பயணியருக்கு, விமான கட்டணத்தில் சலுகை வழங்க, விமான சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பயணியர் விமான சேவை கட்டணங்களை உயர்த்தி, விமான போக்குவரத்து அமைச்சகம், சமீபத்தில் உத்தரவிட்டது. விமான பயணத்தின் போது, பயணியருக்கான இலவச சேவைகள், கட்டண சேவைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டது.இது குறித்து, பயணியரிடமே கருத்துக்கள் கேட்கப்பட்டன.

அதன் அடிப்படையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதன் விபரம்:விமான பயணத்தின் போது, பயணியர் கையில் சுமக்கும் பைகளை தவிர, கூடுதலாக எடுத்து வரும் பைகள், செக் இன் லக்கேஜ் என, அழைக்கப்படுகின்றன.இந்த செக் இன் லக்கேஜ் இன்றி, வெறும் கைப்பையுடன் பயணிக்கும் பயணியருக்கு, விமான கட்டணத்தில் சலுகைகள் அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

பயண சீட்டு முன்பதிவின் போதே, இது குறித்து தெரிவிக்க வேண்டும். அது, பயணச் சீட்டில் குறிப்பிடப்படும். பயணத்தின் போது, கூடுதல் பைகள் எடுத்து வராமல் இருந்தால் மட்டுமே, இந்த சலுகை பொருந்தும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை