'கேப்டன் ஆபீஸ் வெறிச்'

தினமலர்  தினமலர்
கேப்டன் ஆபீஸ் வெறிச்

'சீ ட்' கேட்க விரும்புவோர், கட்சி அலுவலகத்தில், விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என, தே.மு.தி.க., அறிவித்தது. பிரேமலதா அறிவிப்புக்கு, 'ரெஸ்பான்ஸ்' இருந்தது. ஆனால், மனு தாக்கல் ஆனது, விஜயகாந்த், பிரேமலதா, விஜயபிரபாகரன், சுதீஷ் என, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மட்டும் தான். அவர்களே ஏற்பாடு செய்தது என்கின்றனர்.

ஒரே ஏமாற்றம்.


அதோடு முதல் நாள் முடிந்தது. இரண்டாவது நாளில் ஒருத்தரையும் காணோம். மேஜையும், நாற்காலியும் போட்டு, மனு வாங்க காத்திருந்த நிர்வாகிகளுக்கு ஒரே ஏமாற்றம். தலைமைக்கோ அதிர்ச்சி.ஒரு காலத்தில், நம் கட்சியில் சீட் வாங்க அலை மோதிய கூட்டம், எங்கே போனது என, தலைமைக்கு புரியவில்லை. அப்போதெல்லாம், தொகுதிக்கு, 10 பேராவது பணம் கட்டுவர். ஆட்களை திரட்டி வந்து, பலத்தை காட்டுவர். கோயம்பேடு நுாறடிச்சாலையே வாகன நெரிசலில் திணறும். கடந்த, 2011 தேர்தலுடன், அதெல்லாம் மலையேறி விட்டது. அதிலும், 2016 ல், நாலு தலைவர்கள் சேர்ந்து, ம.ந.கூ., என சொல்லி, 'முதல்வர் ஆக்குகிறோம் வாங்க' என, விஜயகாந்தை இழுத்துச் சென்று, இந்த கதிக்கு ஆளாக்கி விட்டனர். அதற்கு பிறகு, சீண்ட மறுக்கின்றன, பெரிய கட்சிகள்.

இப்போது, கூட்டணியை முடிவு செய்ய முடியாத நிலை. ஆனாலும், 234 தொகுதிகளிலும் போட்டியிட, விருப்ப மனு அளிக்கலாம் என, அறிவித்தது. பொது தொகுதிக்கு, 15 ஆயிரம் ரூபாய், தனித் தொகுதிக்கு, 10 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயித்தது. முதல் நாளான, 25ம் தேதி, 50 பேர் வந்தனர். இரண்டாவது நாளான நேற்று, ஒருத்தரும் எட்டிப் பார்க்கவில்லை.
வந்த ஓரிருவர் கூட, மனு விற்பனை எப்படி நடக்கிறது என்று பார்க்க வந்ததாக கூற, வாடிப் போனதாம் நிர்வாகிகள் கூடாரம்.

மூலக்கதை