போட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., : திரிணாமுல் காங்கிரசில் பரபரப்பு

தினமலர்  தினமலர்
போட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., : திரிணாமுல் காங்கிரசில் பரபரப்பு

கோல்கட்டா: திரிணமுல் காங்., முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்.எல்.ஏ.,வுமான சித்திக்குல்லா சவுத்ரி, வரும் சட்டசபை தேர்தலில், சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத சூழல் காரணமாக, போட்டியிட மறுத்துஉள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. வேடிக்கைஇங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், 'மோங்கோல்கோட் சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை' என, திரிணமுல் காங்., சட்டசபை உறுப்பினர் சித்திக்குல்லா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:கிழக்கு புர்த்வான் மாவட்ட மண்ணின் மைந்தன் நான். கடந்த தேர்தலில், மோங்கோல் கோட் தொகுதியில், 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றேன். ஆனால், கட்சியின் மாவட்ட தலைமை ஒத்துழைக்காததால், தொகுதிக்கு உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை. என் தொகுதி, வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அதனால், வரும் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என, கட்சித் தலைமைக்கு தெரிவித்து விட்டேன்.இவ்வாறு, அவர் பேசினார்.


தலைவலி

நந்திகிராம் போராட்டத்தில், மம்தாவின் வலது கரமாக விளங்கியவர், சித்திக்குல்லா சவுத்ரி. இவர், மேற்கு வங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். திரிணமுல் காங்.,கில் இருந்து சமீபத்தில் பல முக்கிய தலைவர்கள் வெளியேறியுள்ளனர்.இந்நிலையில், சித்திக்குல்லா சவுத்ரியின் முடிவு, மம்தாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை