வன்னியர் சமுதாயத்துக்காக பல முறை சிறை சென்று வந்துள்ளார் ராமதாஸ்: முதல்வரை சந்தித்தப்பின் அன்புமணி ராமதாஸ் பேட்டி.!!!

தினகரன்  தினகரன்
வன்னியர் சமுதாயத்துக்காக பல முறை சிறை சென்று வந்துள்ளார் ராமதாஸ்: முதல்வரை சந்தித்தப்பின் அன்புமணி ராமதாஸ் பேட்டி.!!!

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதா தமிழக சட்டமன்ற தேர்தலில் நிறைவேற்றப்பட்ட நிலையில், சென்னை பசுமைவழிச்சாலை சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமுதாயத்துக்கு உள்ஒதுக்கீடு கேட்டு கடந்த 40 ஆண்டாக பாமக போராட்டம் நடத்தி வருகிறது. வன்னியர் சமுதாயத்துக்காக போராடி பல முறை சிறை சென்று வந்துள்ளார் ராமதாஸ் என்றும் தெரிவித்தார்.

மூலக்கதை