ஆசியாவின் முதல் பணக்காரர் மீண்டும் முகேஷ் அம்பானி

தினமலர்  தினமலர்
ஆசியாவின் முதல் பணக்காரர் மீண்டும் முகேஷ் அம்பானி

புதுடில்லி:ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில், மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார், முகேஷ் அம்பானி.

புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில், ஆசியாவில், முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, அண்மையில் அந்த இடத்தை சீனாவை சேர்ந்த, ஜாங் ஷான்ஷன் என்பவரிடம் இழந்தார்.

இந்நிலையில், இந்த வாரம், மீண்டும் விட்ட இடத்தை பிடித்துள்ளார், முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு, தற்போது, 5.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.சீனாவில், பாட்டில் குடிநீர் வணிகத்தில் கொடி கட்டி பறக்கும், ஜாங் ஷான்ஷன் சொத்து மதிப்பு சரிந்து, தற்போது, 5.59 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த வாரம், இவரது வணிகம், 20 சதவீத இழப்பை சந்தித்ததால், இவரது சொத்து மதிப்பும் சரிந்தது.

இரண்டு ஆண்டுகளாக, முதலிடத்தில் இருந்த அம்பானியை, ஜாங் ஷான்ஷன், கடந்த டிசம்பரில் பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தை பிடித்தார். அதுமட்டுமின்றி; இந்த ஆண்டு துவக்கத்தில், பங்குச் சந்தை ஆலோசகர் வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளி, உலகளவில் ஆறாவது இடத்துக்கும் முன்னேறினார், ஜாங் ஷான்ஷன்.

மூலக்கதை