பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன்

தினமலர்  தினமலர்
பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன்

அமெரிக்க அரசியல் ஆலோசகர் நீரா டான்டன்(50). இந்திய பூர்வீகம் கொண்ட நீரா, பில் க்ளின்டன், பராக் ஒபாமா உள்ளிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கு அமெரிக்க அரசியல் ஆலோசகராக இருந்து வந்துள்ளார். தேர்தல் வியூகத்தை வகுத்தல், அரசு செயல்பாடுகளை திட்டமிடுதல் உள்ளிட்ட பல செயல்களில் சிறந்து விளங்கினார் நீரா டான்டன்.


அமெரிக்கா நிர்வாக மற்றும் வர்த்தகத் துறையில் முக்கிய அதிகாரியாக நீரா டான்டன் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை ஜோ பைடன் அரசு அளித்துள்ளது. அவரது பதவி குறித்த விவரங்கள் தற்போது அமெரிக்கா காங்கிரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் க்ளின்டன் மற்றும் ஹிலாரி க்ளின்டன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நீரா டான்டன், பில் க்ளின்டன் வெற்றிக்கு முக்கியக் காரணகர்த்தாவாக விளங்கினார். காலாகாலமாக ஜனநாயகக் கட்சிக்கு விசுவாசியாக இருந்த அவர், ஒபாமாவின் 10 ஆண்டுகால ஆட்சியின்போது சிறந்த அரசியல் ஆலோசகராக இருந்து வந்துள்ளார்.
அவரது பங்களிப்பைக் கருத்தில் கொண்டு ஜோ பைடன் அமைச்சரவை அவருக்கு தங்களது ஆட்சியில் முக்கியப் பதவி அளிக்க முடிவு எடுத்தது. ஆனால் நீரா டான்டன் கடந்த டிரம்ப் ஆட்சி காலத்தில் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை இட்டார்.



தற்போது அமெரிக்க நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரியாக பொறுப்பேற்க அவர் தனது சர்ச்சைகளில் இருந்து விடுபட வேண்டியது அவசியம். இதற்காக நீரா டான்டன் கிட்டத்தட்ட ஆயிரம் சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை