கோவாக்சினின் 3-ம் கட்ட சோதனை முடிவுகள் இரண்டு வாரத்தில் வெளியாகும்: பாரத் பயோடெக் நிறுவனம்

தினகரன்  தினகரன்
கோவாக்சினின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இரண்டு வாரத்தில் வெளியாகும்: பாரத் பயோடெக் நிறுவனம்

டெல்லி: கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் 3-ம் கட்ட சோதனை முடிவுகள் இரண்டு வாரத்தில் வெளியாகும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்ற சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்ட கடந்த ஜனவரி 3-ம் தேதியே கோவாக்சினுக்கும் அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. முதற்கட்டமாக மருத்துவர் செவிலியர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 3-ம் கட்ட சோதனை நடக்காமல் கோவாக்சினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் 3 ஆம் கட்ட சோதனை முடிவுகள் இரண்டு வாரத்தில் வெளியாகும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளை ஒன்றாக சேர்த்து நடத்தியிருந்தால் கோவாக்சினின் திறன் திட்டமிட்டபடி நிரூபிக்கப்பட்டிருக்கும். சில காரணங்களால் அது நடக்காமல் போய் விட்டது என கூறினார் தொடர்ந்து பேசிய அவர்; கோவாக்சின் தடுப்பூசி, தென்னாப்பிரிக்க மரபணு மாற்ற வைரசையும் கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுவதாக கூறினார்.

மூலக்கதை