தனியார்மயமாக்கலுக்கு மக்களை பழக்கப்படுத்தும் வகையில் ரயில் கட்டணம் மறைமுகமாக உயர்வு: எஸ்ஆர்எம்யு குற்றசட்டு

தினகரன்  தினகரன்
தனியார்மயமாக்கலுக்கு மக்களை பழக்கப்படுத்தும் வகையில் ரயில் கட்டணம் மறைமுகமாக உயர்வு: எஸ்ஆர்எம்யு குற்றசட்டு

சென்னை: பண்டிகைகால ரயில் என்ற பெயரில் மறைமுகமாக ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக எஸ்ஆர்எம்யு குற்றம்சாட்டியுள்ளது. தனியார்மயமாக்கலுக்கு மக்களை பழக்கப்படுத்தும் வகையில் ரயில் கட்டணத்தை மத்திய அரசு மறைமுகமாக உயர்த்தியுள்ளது என கண்ணையா தெரிவித்தார். ரயில்வே அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கண்ணையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மறைமுக ரயில்கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ள ரயில்வே அமைச்சகத்தை கண்டித்தது போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தென்னகத்தில் இயக்கப்பட்ட 329 ரயில்களை 190 ஆக குறித்து 36 ரயில்கள் பண்டிகை கால சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. தென் தமிழக ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட 169 கட்டண சலுகைகள் 17-ஆக குறைக்கப்பட்டுள்ளது என கன்னையா குறிப்பிட்டுள்ளார். 60 வயதான ஆண்களுக்கு வழங்கப்பட்ட  40 சதவிகித கட்டண சலுகை, 58 வயதான பெண்களுக்கு வழங்கப்பட்ட 50சதவிகித கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்துவது மக்களை வங்கிக்கும் செயல் என கண்ணையா கூறியுள்ளர்.

மூலக்கதை