உ.பி.யில் வாடிக்கையாளர்களை அழைப்பதில் 2 பானிபூரி கடைக்காரர்களிடையே மோதல் : உருட்டுக் கட்டை, இரும்பு கம்பிகளால் கொடூரமாக தாக்கினர்!!

தினகரன்  தினகரன்
உ.பி.யில் வாடிக்கையாளர்களை அழைப்பதில் 2 பானிபூரி கடைக்காரர்களிடையே மோதல் : உருட்டுக் கட்டை, இரும்பு கம்பிகளால் கொடூரமாக தாக்கினர்!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாடிக்கையாளர்களை போட்டிப் போட்டு கொண்டு வரவேற்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் என்ற இடத்தில் பானிப்பூரி கடைகளுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பில் இரண்டு குழுவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு சற்று நேரத்தில் கை கலப்பாக மாறவே. இரு தரப்பினரும் கைகளில் கிடைத்த உருட்டுக் கட்டை, பைப்புகள், இரும்பு கம்பிகளால் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர். அடித்து தாங்க முடியாமல் கீழே விழுந்த பெரியவர் மீண்டும் எழுந்து எதிர்தரப்பினரை தாக்கினார். தப்பி ஓடியவர்களை ஒரு தரப்பினர் துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாபாரிகள் இடையே நடைபெற்ற மோதலில் கடை வீதியில் நின்று இருந்த 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் அடைந்தனர். வியாபாரிகள் இடையேயான மோதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன.  

மூலக்கதை