பெட்ரோல் விலையை குறைப்பதால் ராம பக்தர்களுக்கு உணவு கிடைக்கும், ராமரும் சந்தோஷப்படுவார் : சிவசேனா வலியுறுத்தல்!

தினகரன்  தினகரன்
பெட்ரோல் விலையை குறைப்பதால் ராம பக்தர்களுக்கு உணவு கிடைக்கும், ராமரும் சந்தோஷப்படுவார் : சிவசேனா வலியுறுத்தல்!

மும்பை : ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை குறைப்பதால் ராம பக்தர்களுக்கு உணவு கிடைக்கும், ராமரும் சந்தோஷப்படுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அயோத்தியில் ராமா் கோவில் கட்டுவதற்காக நிதி திரட்டி வருகிறது. அதே சமயம், நாட்டின் ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில், ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் இதனால் ராம பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். ராமரும் சந்தோஷப்படுவார் என்று சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் \'கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நடிகர்கள் அக்சய்குமார், அமிதாப் பச்சன் போன்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். 2014-ம் ஆண்டு வரை கருத்து கூற சுதந்திரம் இருந்தது. அரசை விமர்சிப்பவர்கள் தேசதுரோக வழக்கில் சிறையில் அடைக்கப்படவில்லை.ஆனால் தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்த போதும் சினிமா நட்சத்திரங்கள் மவுனமாக உள்ளனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து கூற முடியாமல் பேச்சுரிமையை இழந்துள்ளோம்,\' என தெரிவித்துள்ளது.

மூலக்கதை