இங்கிலாந்தில் மார்ச் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இங்கிலாந்தில் மார்ச் 8ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

பிரிட்டன்: மார்ச் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து அங்கு பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் என வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் 4 அம்ச திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். அதன் முதல் திட்டத்தின் படி வரும் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 2 பேர் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதற்கு அனுமதியளிக்கப்படுவர் என்றவர், மார்ச் 26 முதல் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார். பள்ளிகள் திறக்கப்படும் முடிவுக்கு பிரிட்டனில் பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே வரும் 29ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்ற உரையில் போரிஸ் ஜான்சன் நிறைய அறிவிப்புகளை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை