தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் மார்ச் 7ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பு?: அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சூசக தகவல்..!!

தினகரன்  தினகரன்
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் மார்ச் 7ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பு?: அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சூசக தகவல்..!!

திஸ்பூர்: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 7ம் தேதி வெளியாகும் என்று  பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்தார். அசாம் மாநிலம் கவுஹாத்தியில் பேசிய பிரதமர், அசாம், மேற்குவங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கு மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என்று சூசகமாக கூறினார். கடந்த 2016ம் ஆண்டு இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி மார்ச் 4ம் நாள் அறிவிக்கப்பட்டது நினைவில் இருக்கிறது. எனவே மார்ச் மாத முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்று யூகித்து இருக்கின்றேன். இந்த ஆண்டு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் முறையாக அறிவிக்கும். தேர்தலுக்கு முன்னதாக எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை, அசாம், மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ள விரும்புகிறேன். மார்ச் 7ம் நாள் சட்டமன்ற தேர்தல் தேதிகள் வெளியாகலாம். அதுவரை எனக்கு நிறைய நேரம் இருக்கிறது என தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் சூசக தகவலை அடுத்து, அசாம், மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மார்ச் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை