இந்தாண்டு தனுஷ் நடித்து 5 படங்கள் வருமா?

தினமலர்  தினமலர்
இந்தாண்டு தனுஷ் நடித்து 5 படங்கள் வருமா?

2020ம் ஆண்டு கொரோனா தாக்கத்தால் எண்ணற்ற படங்கள் வெளிவராமல் முடங்கிப் போகின. அந்தப் படங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன. இந்த ஆண்டு சில நடிகர்களின் அதிகமான படங்கள் வெளியாக வாய்ப்புண்டு. தமிழ் சினிமாவில் தற்போதைக்கு விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்குமார் ஆகியோர்தான் அதிகப் படங்களில் நடித்து வருகிறார்கள். இவர்கள் நடித்துள்ள ஐந்தாறு படங்கள் இந்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளது. அது போலவே தனுஷ் நடித்துள்ள ஐந்தாறு படங்கள் இந்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதற்கடுத்து கர்ணன் படம் ஏப்ரல் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. தனுஷ் நடித்துள்ள ஹிந்திப் படமான அத்ராங்கி ரே ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வெளியாகப் போகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படமும், அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்த வருடத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது த கிரே மேன் படத்திற்காக ஹாலிவுட் சென்றுள்ள தனுஷ் மே மாதம்தான் இந்தியா திரும்புவாராம். அதற்குப் பிறகே தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.

மூலக்கதை