கோதாவரிக் கரையில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு

தினமலர்  தினமலர்
கோதாவரிக் கரையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரானோ தடைகளுக்குப் பிறகு ஐதராபாத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது படக்குழுவினர் ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.

சிங்கம்பள்ளி மற்றும் பப்பிகொன்டலு கிராமங்களுக்கு இடையில் உள்ள கோதாவரி ஆற்றுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். அங்கு சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாராகி வரும் சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்' என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பலரும் படமாக்க முயற்சித்து பின் கைவிட்டனர். தற்போது மணிரத்னம் முழு முயற்சியுடன் அதைப் படமாக்கி வருகிறார்.

மூலக்கதை