வசந்தபாலன் படத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி

தினமலர்  தினமலர்
வசந்தபாலன் படத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி

நடிகர், இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்குபவர் சுரேஷ் சக்கரவர்த்தி. அழகன் உள்ளிட்ட படங்களில் பார்த்து ஏற்கனவே பரிச்சயமான முகம் தான் என்றாலும், பிக் பாஸ் சீசன் 4 அவரை மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கி விட்டது.

தற்போது யூடியூப்பில் சமையல் சேனல் நடத்தி வரும் சுரேஷ் சக்கரவர்த்தி, துப்பாறிவாளன் 2 படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை அவரே தனது சமூகவலைதளப் பக்கம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை