வாரிசு விமர்சனம் வேண்டாம்

தினமலர்  தினமலர்
வாரிசு விமர்சனம் வேண்டாம்

ஐபிஎல்., கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் தேர்வானது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுப்பற்றி ஹிந்தி இயக்குனரும், நடிகருமான பர்ஹான் அக்தர் கூறுகையில், ''அர்ஜுனும், நானும் ஒரே ஜிம்மிற்கு செல்கிறோம். அங்கு அவர் தன்னை தயார்படுத்த எப்படி கடினமாக உழைக்கிறார், சிறந்த கிரிக்கெட் வீரராக மாற எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை பார்த்திருக்கிறேன். அவரை நோக்கி வீசப்படும் 'வாரிசு' என்ற வார்த்தை கொடுமையானது. அவரின் உத்வேகத்தை கொன்றுவிடாதீர்கள். பயணத்தை துவக்கும் முன்பே கீழே தள்ளாதீர்கள்'' என்றார்.

மூலக்கதை