குடும்பத்துடன் உப்பென்னா படம் பார்த்த பாலகிருஷ்ணா

தினமலர்  தினமலர்
குடும்பத்துடன் உப்பென்னா படம் பார்த்த பாலகிருஷ்ணா

கடந்த ஒரு வாரமாகவே தெலுங்கு திரையுலகின் ஹாட் டாபிக்கே உப்பென்னா படத்தின் வெற்றிதான். படத்தின் நாயகன் வைஷ்ணவ் தேஜ் மற்றும் நாயகி கீர்த்தி ஷெட்டி ஆகியோர் புதியவர்கள் என்றாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய்சேதுபதி படத்திற்கு மாஸ் அப்பீல் கொடுத்தார். அதேசமயம் இந்தப்படத்தை அனைத்து கமர்ஷியல் படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் புஜ்ஜிபாபு.

ஒரு வாரத்திலே இந்தப்படத்தின் வசூல் 70 கோடியை தொட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வரும் இந்தப்படத்தை சமீபத்தில் நடிகர் பாலகிருஷ்ணா தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார். படம் முடிந்ததும் இயக்குனர் புஜிபாபுவை மனதாரா பாராட்டியும் உள்ளார் பாலகிருஷ்ணா.

மூலக்கதை