சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் அசாதாரணமானது: பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் அசாதாரணமானது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் அசாதாரணமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தத் துறை மீதான நமது உறுதிப்பாட்டை இது காட்டுகிறது. கொரோனா நோய் தொற்று எதிர்காலத்தில் இதேபோன்ற சவால்களை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்க வேண்டிய ஒரு பாடத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது என சுகாதாரத் துறை தொடர்பான பட்ஜெட் செயல்படுத்தல் குறித்த வீடியோ கான்பிரஷின் போது பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்று, இந்தியாவின் சுகாதாரத் துறையில் உலக நம்பிக்கை புதிய உச்சத்தில் உள்ளது. \'மேட் இன் இந்தியா\' தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க, நோயைத் தடுப்பது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் சுகாதார அணுகல், சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் சுகாதார நிபுணர்களின் தரம் மற்றும் அளவு அதிகரித்தல் போன்ற 4 முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தபடுவதாக மோடி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து காசநோயை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். முகமூடிகளை அணிவது, ஆரம்பகாலத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவையே காசநோயை தடுப்பதில் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சுகாதாரத்துறையில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், தொலைதூர பகுதிகளிலும் இதுபோன்ற வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்கிறது. சுகாதாரத்துறையில் முதலீடு செய்வது வேலை வாய்ப்புகளை கொண்டு வருவதிலும் கவனம் செலுத்துகிறது என  சுகாதாரத் துறை தொடர்பான பட்ஜெட் செயல்படுத்தல் குறித்த வீடியோ கான்பிரஷில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மூலக்கதை