சரிவில் இருந்து மீளும் ரியல் எஸ்டேட் துறை

தினமலர்  தினமலர்
சரிவில் இருந்து மீளும் ரியல் எஸ்டேட் துறை

மும்பை : ரியல் எஸ்டேட் துறை, சரிவில் இருந்து மீண்டு வருவதாக, இந்திய தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்திய ரியல் எஸ்டேட் துறை, ‘கே’ வடிவ மீட்சியை கண்டு வருகிறது. தாராள கடன் வசதி, வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றால், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.எனினும், இத்துறையில் பெரிய நிறுவனங்கள் தான் வளர்ச்சி கண்டுள்ளன. சிறிய நிறுவனங்கள் இன்னும் போராடிக் கொண்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு, அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ள, 10 நிறுவனங்கள், 61 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. அதே சமயம், ஒட்டு மொத்த சந்தையின் வளர்ச்சி, 24 சதவீதமாக, கொரோனாவுக்கு முந்தைய நிலையிலேயே உள்ளது.

கடந்த ஆண்டு, ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், கொரோனா பாதிப்பால், முக்கிய எட்டு நகரங்களில், வீடுகளுக்கான தேவை, 62 சதவீதம் குறைந்தது. இது, மூன்றாவது காலாண்டில், சற்று முன்னேற்றத்துடன், 24 சதவீதமாக காணப்பட்டது. நம்பகத்தன்மை உள்ள நிறுவனங்கள், மக்கள் ஆதரவால் வளர்ச்சி கண்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை